விழுப்புரம்

ஐஎப்இடி பொறியியல் கல்லூரி கட்டடவியல் மாணவிகள் சாதனை

தினமணி

கட்டடங்களின் கட்டுமானத்துக்கு நீண்ட ஆயுள் வழங்கும் செயல்திட்டத்தை கண்டறிந்த விழுப்புரம் ஐஎப்இடி கல்லூரி மாணவிகள் விருது பெற்றனர்.
 விழுப்புரம் கெங்கராம்பாளையம் ஐஎப்இடி பொறியியல் கல்லூரி கட்டடவியல் துறை 4-ஆம் ஆண்டு மாணவிகள் டி.ஏ.பவானி, எஸ்.கார்த்திகா ஆகியோர், கட்டடங்களில் உள்ள கம்பிகளில் அரிப்புத் தன்மையை தடுக்கவும், கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்கவும் மணல், சிவப்பு சகதியையும் கலந்து கட்டுமானத்தில் பயன்படுத்தும் புதிய செயல் திட்டத்தை அண்மையில் கண்டறிந்தனர்.
 கட்டடங்கள் கட்டும் போது, உறுதியோடு நீண்ட காலம் தாங்கும் வகையில், கம்பியை பலப்படுத்தவும், கம்பியை விரைவில் செயலிழக்கச்செய்யாமல் இருப்பதற்கும், கட்டுமானத்தின் போதே, சிமென்ட் கலவையுடன் சிவப்பு சகதியும், மணலையும் கலந்து, சிமென்ட் கலவையில் உள்ள கந்தகத்தின் அளவைக் குறைக்கும் செயல் திட்டத்தை அந்த மாணவிகள் வடிவமைத்துள்ளனர்.
 இந்த செயல் திட்டம் என்எல்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட மாணவர்களின் பொறியாளர் விருது போட்டியில் சிறந்த செயல் திட்டத்துக்கான முதல் பரிசை வென்றுள்ளது. மாணவிகளின் இந்த முயற்சிக்கு, கல்லூரியின் கட்டடவியல் துறைத் தலைவர் எல்.சௌந்தரி, வே.திருமுருகன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
 கட்டட கட்டுமானத்துக்கான சிமென்ட் கலவையில் கந்தகத் தன்மையை குறைக்கும் செயல்திட்டத்தை கண்டறிந்து விருது பெற்று வந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கி, கல்லூரி தலைவர் கே.வி.ராஜா, துணைத் தலைவர் முகமதுஇலியாஸ், செயலாளர் சிவராம்ஆல்வா, கல்லூரி முதல்வர் மகேந்திரன், துணை முதல்வர் மெடில்டா, வேலைவாய்ப்புத் துறைத் தலைவர் ஆஷா ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT