முகப்பு
விழுப்புரம்

படேசாகிப் சித்தர் கோயிலில் குருபூஜை விழா

கண்டமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மகான் படேசாகிப் சித்தர் கோயிலில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

கண்டமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மகான் படேசாகிப் சித்தர் கோயிலில் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசத்திரத்தில் சித்தர் சமாதியடைந்த மகான் படேசாகிப் சுவாமிகள் கோயில் உள்ளது. இதன் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. பொது மக்களுக்கு நோய்த் தீர்க்கும் சேவையாற்றி, தன்னைத்தானே இந்த உலகுக்கு பிரதிஷ்டை செய்த மகான் படேசாகிபு சுவாமிகள், சித்தர் ரூபமாய் அவதாரம் செய்த ஆயில்ய திருநாளில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் குருபூஜை விழா நடைபெறுகிறது.
 நிகழ் ஆண்டு குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு மங்கள வாத்தியங்களுடன் குருபூஜை விழா தொடங்கியது. 8 மணிக்கு கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அர்த்தர் புணுகு, மகா சந்தனத்தால் மகா மங்கள அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
 தொடர்ந்து, பகல் 11 மணிக்கு மகான் படேசாகிப் சுவாமிகளின், திருவுருப்படம் வைத்த திருத்தேர் ஊர்வலம் தொடங்கி சித்தர் கோயிலை வலம் வந்தது. 11.45 மணிக்கு கொடியேற்றப்பட்டு, மகான் சன்னதியில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.
 இதனைத் தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், புதுவை, தமிழகப் பகுதிகளைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →