குண்டர் சட்டத்தின்கீழ் இளைஞர் கைது
விழுப்புரம் அருகே தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை குண்டர் சட்டத்தின்கீழ் புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே காணை காலனி பகுதியைச் சேர்ந்த பரசுராமன் மகன் சகாயராஜ்(23). இவர், அந்த பகுதியில் அடிதடி, தாக்குதல், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கொலை முயற்சி வழக்கு ஒன்றில், விழுப்புரம் தாலுகா போலீஸார் சகாயராஜை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இருப்பினும், தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் சகாயராஜ் ஈடுபடுவதைத் தடுக்க குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விழுப்புரம் ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இதனிடையே, கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வரும், சகாயராஜை ஆட்சியரின் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.