முகப்பு
விழுப்புரம்

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் பாமகவினர் ஆர்ப்பாட்டம்

விளைபொருள்களுக்கு உரிய விலை, உடனடிப் பணப் பட்டுவாடா, பொருள்களுக்கு சரியான எடையளவு என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

Updated On : 29 மார்ச், 2018 at 9:28 AM
பகிர்:

விளைபொருள்களுக்கு உரிய விலை, உடனடிப் பணப் பட்டுவாடா, பொருள்களுக்கு சரியான எடையளவு என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன் பாமக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் காசாம்பு பூமாலை, மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் ரமேஷ், ராமு, வடிவேலு, முத்துவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.