முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூருக்கு தணிகைவேல் ரதம் வருகை

இந்துக் கோயில்கள் மீட்பு இயக்கத்தின் வேல் சங்கமம் யாத்திரை சார்பாக, திருக்கோவிலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த தணிகைவேலுக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

Updated On : 29 மார்ச், 2018 at 9:39 AM
பகிர்:

இந்துக் கோயில்கள் மீட்பு இயக்கத்தின் வேல் சங்கமம் யாத்திரை சார்பாக, திருக்கோவிலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த தணிகைவேலுக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.
 தமிழகத்தின் வளம், வளர்ச்சி, ஒற்றுமைக்காக, இந்துக் கோயில்கள் மீட்பு இயக்கம் சார்பில், வேல் சங்கமம் ரத யாத்திரை நடைபெறுகிறது.
 இதற்காக, திருப்பரங்குன்றத்தில் இருந்து குமரவேல், திருச்செந்தூரில் இருந்து சத்ரு சம்ஹாரவேல், பழநியில் இருந்து மருதவேல், சுவாமி மலையில் இருந்து ஞானவேல், திருத்தணியில் இருந்து தணிகைவேல், பழமுதிர் சோலையில் இருந்து சோலைவேல் பூஜிக்கப்பட்டு, யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 இதையடுத்து திருத்தணியில் இருந்து தணிகைவேலுடன் வேல் சங்கம யாத்திரை ரதம் செவ்வாய்க்கிழமை திருக்கோவிலூருக்கு வந்தது.
 ரதத்தை பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் வரவேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.