கண் மருத்துவ கருத்தரங்கம்
விழுப்புரத்தில் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நவீன கண் மருத்துவம் குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமைநடைபெற்றது.
விழுப்புரத்தில் கண் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நவீன கண் மருத்துவம் குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கண் மருத்துவர்கள் சங்கம், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியவை சார்பில், விழுப்புரம் தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு சங்கத் தலைவரும், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவருமான கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
விழுப்புரம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரும் (பொ), சங்கத்தின் செயலாளருமான நேரு முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில், மருத்துவர்கள் அருள், சரஸ்வதி, ராஜகுமாரி, பிரதீக், அனுஷா, மிஹிர், ராகேஷ் ஆகியோர் பங்கேற்று நவீன கண் மருத்துவ முறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கடலூர் கண் மருத்துவர் பாஸ்கர், வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் லோகநாதன், புதுச்சேரி மருத்துவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பங்கேற்றனர். பொருளாளர் தரணிவேல் நன்றி கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 2020- ஆம் ஆண்டிற்குள் கண் பார்வையற்றோர் இல்லாத நிலையை எட்ட வேண்டும், அதற்கு கண் மருத்துவர்கள் நவீன மருத்துவ முறைகளை கற்று நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், சர்க்கரை நோயினால் கண் விழித்திரை பாதிக்கப்படுவதை தடுக்கத் தேவையான விழிப்புணர்வு, சிகிச்சைகளை மேற்கொள்வது சங்கத்தின் நோக்கமாகும் என்று சங்கச் செயலாளர் நேரு கூறினார்.