மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக்
விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், பட்டா மாற்றம், திருமண உதவித்தொகை, கல்விக் கடன், விவசாயக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 536 மனுக்கள் வரப்பெற்றன.
மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியுதவித் திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரண நிதியுதவி திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் சக்கர நாற்காலி மற்றும் மூளை முடக்குவாத சிறப்பு நாற்காலிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, தனித் துணை ஆட்சியர் கி.ரஞ்சினி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் ராம்சந்தர், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) விஸ்வநாதன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.