விழுப்புரம்

அரசுப் பணியாளர் சங்க பொதுக் குழுக் கூட்டம்

DIN

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.  
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கே.ஜெயக்குமார் தலைமை வகித்தார்.  மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.அருணகிரி முன்னிலை வகித்தார்.  
மாவட்டச் செயலாளர் ஆர்.அய்யனார் வரவேற்றார்.  மாநிலத் தலைவர் உ.மா.செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.  ஊரக வளர்ச்சித் துறை ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க மாநில கௌரவத் தலைவர் கே.ஜெயச்சந்திரன்,  சுகாதார மேற்பார்வையாளர் சங்க மாநில அமைப்புச் செயலர் எஸ்.சிவகுரு,  ஊரக வளர்ச்சித் துறை ஒன்றிய பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.ஏகாம்பரம், தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் பி.குமரவேல்,  ஆதிதிராவிட பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்க மாநில பொதுச் செயலர் டி.காமராஜ்,  தற்காலிக இளநிலை உதவியாளர் முன்னேற்றச் சங்க பொதுச் செயலர் எஸ்.சர்வேஸ்வரன்,  தென்னரசு,  ரவி,  இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
சத்துணவு பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  சத்துணவு கணினி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஊரக வளர்ச்சித் துறை துப்புரவுப் பணியாளர்களையும்,  
129-ஆவது அரசாணைப்படி  நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வேண்டும்.  அரசுப் பணியாளர்களுக்கு ஊதியக் குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து,  மாவட்ட நிர்வாகிகளாக வெங்கடேசன்,  குமரவேல்,  வட்ட நிர்வாகிகள் எத்திராசு,  சிவாச்சரன், கண்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.  மாவட்ட பிரசார செயலாளர் என்.டேவிட்குணசீலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT