விழுப்புரம்

மக்களை பாதிக்காத வகையில் உரக் கிடங்குகளை அமைக்க திமுக வலியுறுத்தல்

தினமணி

விழுப்புரம் நகரில் பொதுமக்களைப் பாதிக்காத வகையில் உரக் கிடங்கு மையங்களை அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான க.பொன்முடி வலியுறுத்தினார்.
 விழுப்புரம் நகரில் குப்பைகளை சேகரித்து உரமாக்கும் நவீன உரக் கிடங்கு மையங்களை 9 இடங்களில் செயல்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கும் என கருதிய மக்கள், உரக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 அதே போல, விழுப்புரம் நகராட்சி மைதானம் அருகே உரக்கிடங்கு அமைக்கும் பணிக்கு அப்பகுதி மக்களிடம் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாதென நகராட்சியிடம் வலியுறுத்தக் கோரி திமுக மத்திய மாவட்டச் செயலர் க.பொன்முடியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்து முறையிட்டனர்.
 மனுவைப் பெற்ற க.பொன்முடி கூறியதாவது: விழுப்புரத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில், நகராட்சி மைதானம் உள்ளிட்ட இடங்களில், உரக்கிடங்கு அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது தான் நகராட்சி மைதானம் சீர்படுத்தி சிறப்பாக உள்ளது. அங்கே குப்பைகளை கொட்டி உரக்கிடங்கு அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களிலும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 இது தொடர்பாக, அந்தந்த பகுதி மக்களை அழைத்துப் பேசி, அவர்கள் பாதிக்கப்படாத வகையில், உரக்கிடங்கு மையங்களை குடியிருப்புகளுக்கு வெளியே அமைக்க வேண்டும். விழுப்புரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான அமைச்சர் சி.வி.சண்முகமும் இந்தப் பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.
 மாவட்டப் பொருளாளர் என்.புகழேந்தி, முன்னாள் நகர மன்றத் தலைவர் இரா.ஜனகராஜ், நகரச் செயலாளர் இரா.சக்கரை, துணை செயலாளர் புருஷோத், பொதுக்குழு உறுப்பினர் ந.பஞ்சநாதன், மாணவரணி அமைப்பாளர் வினோத் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதையல் எடுத்து தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி: 2 பேர் கைது!

மலர் அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்த கெளமாரியம்மன்!

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

SCROLL FOR NEXT