விழுப்புரம்

ராஜா தேசிங்கு நினைவு தினம் கடைப்பிடிப்பு

செஞ்சியை ஆண்ட மாவீரன் ராஜா தேசிங்குவின் 304-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை அவரது நினைவிடத்தில் பொந்தில் சங்கத்தினர் மற்றும் பாஜகவினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி

செஞ்சியை ஆண்ட மாவீரன் ராஜா தேசிங்குவின் 304-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை அவரது நினைவிடத்தில் பொந்தில் சங்கத்தினர் மற்றும் பாஜகவினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
 செஞ்சியை ஆட்சிபுரிந்து இளம் வயதில் நவாப் படையுடன் போரிட்டு செஞ்சியை அடுத்த கடலியில் வீரமரணம் அடைந்தவர் ராஜா தேசிங்கு. அங்கு அவரது நினைவிடம் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த பாராசரரி குதிரையின் நினைவிடம் ஆகியவை அமைந்துள்ளன.
 இங்கு ராஜாதேசிங்கு நினைவு தினத்தையொட்டி (அக். 3) அவரது வம்சாவளியைச் சேர்ந்த பொந்தில் சங்கத்தினர் மற்றும் செஞ்சி நகர பாஜகவினர் உள்ளிட்டோர் மலர்களால் நினைவிடத்தை அலங்கரித்து அஞ்சலி செலுத்தினர்.
 இந்த நிகழ்ச்சியில் செஞ்சி மஸ்தான்எம்எல்ஏ, பொந்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பவானிசிங், துணைத் தலைவர் இந்திரசிங், பொன்னங்குப்பம் பாபு உதயசிங், விஜயகுமார், ஓசூர் ஸ்ரீதர், மதுரை நாராயணன், ஈரோடு மோகன், திருநெல்வேலி ஹரிசிங், தென்காசி மோகன், கள்ளக்குறிச்சி அன்பரசு, திட்டக்குடி கஜேந்திரன், புதுக்கோட்டை ரவிச்சந்தர், சென்னை சந்திரபான் சென்னை அஸ்தினாபுரம் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 மேலும், பாஜக சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராஜேந்திரன், துணைத்தலைவர் பாண்டியன், செஞ்சி ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT