நன்னாடு கிராமத்தில் அக்.10-இல் மக்கள் தொடர்பு முகாம்
விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு கிராமத்தில் அக்.10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் அருகேயுள்ள நன்னாடு கிராமத்தில் அக்.10-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகின்றனர். பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை முன்னதாகவே அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.