விழுப்புரம்

புதுவை ரௌடி கொலை வழக்கில் 3 பேர் கைது

தினமணி

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே புதுவை ரௌடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 புதுச்சேரி மாநிலம் வில்லியனூரை அடுத்த பொறையூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஜெகன்(31). ரெüடியான இவர் மீது கொலை உள்பட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவருக்கும், புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் லட்டு(எ) நவீனுக்கும் இடையே மீன் வியாபாரத்தில் தகராறு ஏற்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் சூழல் இருந்து வந்தது.
 இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தமிழகப் பகுதியியான, விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே அமணங்குப்பம் என்ற கிராமத்துக்கு தனியாக வந்த ஜெகனை, நவீன் தனது கூட்டாளிகளுடன் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பினார்.
 இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், மீன் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறில் நவீனின் தந்தை ராஜேந்திரனை ஜெகன் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நவீன், தனது நண்பர்கள் தேங்காய்த்திட்டைச் சேர்ந்த இருசப்பன் மகன் கோவிந்தசாமி(24), சங்கர் மகன் சரவணன்(24) ஆகியோருடன் சேர்ந்து ஜெகனை கொலை செய்தது தெரிய வந்தது.
 இதையடுத்து, தலைமறைவாக இருந்து வந்த நவீன், அவனது கூட்டாளிகள் சரவணன்(24), கோவிந்தசாமி(24) ஆகியோரை கண்டமங்கலம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். பின்னர், அவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT