விழுப்புரம்

ஆர்கேஎஸ் கல்லூரியில் கருத்தூக்கக் கருத்தரங்கு

தினமணி

இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில் "என் வாழ்க்கை, என் கையில்' எனும் கருத்தூக்கக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
 கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். செயலர் என்.கோவிந்தராஜூ, பொருளாளர் அ.தமிழ்மணி, முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அ.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் பி.ஜான்விக்டர் வரவேற்றார்.
 சிறப்பு அழைப்பாளராக சென்னை மக்கள் தொடர்பு ஆலோசகர் ராம்குமார் சிங்காரம் கலந்துகொண்டு கல்வியை வசப்படுத்துவது, போட்டிகளை எதிர் கொள்வது, வாழ்க்கையில் வெற்றி பெறுவது ஆகியவை குறித்து ஊக்க உரை நிகழ்த்தினார்.
 கருத்தரங்கில் மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜி.ஜெயசீலன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT