விழுப்புரம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வீட்டு உரிமையாளர் மகன் கைது

தினமணி

விழுப்புரம் கே.கே. சாலை கணபதி நகரைச் சேர்ந்த அன்புச்செழியன் மகன் பரணி (எ) லட்சுமி நரசிம்மன்(23). வீட்டின் முன்புறம் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு ஒரு குடும்பத்தினர், 6 வயது பெண் குழந்தையுடன் வசிக்கின்றனர்.
 வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை ஒரு அறைக்கு லட்சுமி நரசிம்மன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சப்தமிட்ட சிறுமியை தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் லட்சுமி நரசிம்மனை விழுப்புரம் தாலுகா போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

SCROLL FOR NEXT