விழுப்புரம்

அமமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

DIN

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் மா.கோமுகி மணியன், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் தென்கீரனூர், மலைக்கோட்டாலம் விளம்பார் உள்ளிட்ட கிராமங்களுக்கும், கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதிகளான கோட்டைமேடு, கருணாபுரம், சிருவங்கூர், ஜோகியர்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வாகனத்தில் சென்று அவர் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார்.
அதேபோல சின்னசேலம் நகர்ப் பகுதியிலும் வாக்கு சேகரித்தார். அப்போது, வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி ஆதரவு கோரினார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அ.பிரபு, மாவட்ட மாணவரணிச் செயலாளர் சீனுவாசன், பேரவைச் செயலாளர் பால்ராஜ், ஒன்றியச் செயலாளர் மதுசூதனன், நகரச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT