விழுப்புரம்

பறிமுதல் செய்யப்பட்ட  மதுப் புட்டிகள் அழிப்பு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகள் மற்றும் எரிசாராயம் மரக்காணம் அருகே போலீஸார் வெள்ளிக்கிழமை அழித்தனர்.
புதுவையிலிருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மதுப் புட்டிகள், சாராயம் கடத்தப்படுவதைத் தடுக்க மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சோதனைகளில், மது விலக்கு வழக்குகளின் பறிமுதல் செய்யப்படும் மதுப் புட்டிகள், சாராயம் ஆகியவை குறித்த காலம் வரை பாதுகாக்கப்பட்டு பின்னர் அழிக்கப்படும். 
அதன்படி, மரக்காணம், வானூர், கிளியனூர், அனுமந்தை, அனிச்சங்குப்பம், தாழங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாரால் கடந்த ஓர் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயம், மதுப்புட்டிகள் கோட்டக்குப்பம் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்த மதுப்புட்டிகளை உரிய முறையில் அழிக்க உத்தரவிடப்பட்டது. இதைடுத்து, காவல் நிலையத்திலிருந்து மதுப் புட்டிகள் எரி சாராயம் வாகனங்கள் மூலம் மரக்காணம் அருகே தீர்த்தவாரி என்ற இடத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனர். பின்னர், திண்டிவனம் நீதிமன்ற 
நீதிபதி நளினிதேவி முன்னிலையில், மரக்காணம் அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் எரி சாராயத்தை தீ வைத்தும், மதுவை மணலில் கொட்டியும் அழித்தனர். பின்னர், அவை பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன.
மொத்தம் 4,375 லிட்டர் எரிசாராயம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுப்புட்டிகள் அழிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT