விழுப்புரம்

மீனவா்கள் இரண்டாவது நாளாககடலுக்குச் செல்லவில்லை

DIN

பலத்த மழை, கடல் சீற்றம் காரணமாக, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் இரண்டாம் நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மீன் பிடிப்பதற்கு கடலுக்குச் செல்லவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் முதல் கோட்டக்குப்பம் வரையில் 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், நாட்டுப்படகுகள் மூலமாக நாள்தோறும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததுடன், கடலும் சீற்றத்துடன் காணப்பட்டத்தால், எக்கியாா்குப்பம், கைப்பாணிக்குப்பம், மரக்காணம், பொம்மையாா்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டத்தால், மேற்கூறிய கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இதனால், படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவா்கள் கடலுக்குச் செல்லாததால், அந்தப் பகுதியில் உள்ள மீன் அங்காடிகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT