விழுப்புரம்

குடிநீர்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் மறியல்

DIN

கள்ளக்குறிச்சி நகராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி, 5-ஆவது வார்டு காசீம்பாய் கொள்ளைசாலை பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை என அந்தப் பகுதி மக்கள் நகராட்சி ஆணையரிடம் பலமுறை முறையிட்டனராம். 
இதற்கு பதிலளித்த ஆணையர், தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறியும் தண்ணீர் சரிவர வரவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் தங்க.விஜய்குமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT