விழுப்புரம்

வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்

DIN

திருக்கோவிலூரில் வழக்குரைஞர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு, கே.ரங்கநாதன் தலைமை வகித்தார். ஜி.தேவநாதன், மு.தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.செல்வராஜி வரவேற்றார். அன்பு, சரவணக்குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், 
திருக்கோவிலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ.9.50 கோடி,  நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பரிந்துரை செய்த அமைச்சர் சி.வி.சண்முகம், உறுதுணையாக செயல்பட்ட உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் இரா. குமரகுரு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாவட்ட உரிமை
யியல் முதன்மை நீதிபதி திருஞானசம்பந்தம் முன்னிலையில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 
 நிர்வாகிகள் எஸ்.அன்பு, தமிழ்ச்செல்வன், சுகஸ்ரீ, ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வழக்குரைஞர்கள் சங்க முன்னாள் செயலர் கே.உமாசங்கர் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT