விழுப்புரம்

ஆயுதம் பதுக்கியதாக தவாக பிரமுகர் கைது

DIN

ஆயுதம் பதுக்கி வைத்திருந்ததாக தவாக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், சின்னகள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஆறுமுகம் (39). தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகியான இவர், கடலூர் சாவடி வைஷ்ணவி தோட்டத்தில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக டெல்டா பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதைஉறுதிப்படுத்திய போலீஸார் இதுகுறித்து புதுநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் த.கி.சரவணன் தலைமையிலான போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். 

அப்போது, வீட்டின் பின்புறத்தில் பதுக்கி வைத்திருந்த 5 கத்திகள், 6 இரும்புக் குழாய்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை ஆயுதங்கள் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT