விழுப்புரம்

இளைஞர் மர்மச் சாவு: நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

DIN

விக்கிரவாண்டி அருகே கிணற்றில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்தக் கோரி அவரது பெற்றோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி அடுத்த ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் மனைவி தனலட்சுமி(42).  இவரது மகன்  தினேஷ்குமார்(23).  இவர்கள் திருவள்ளூர் மாவட்டம், கொளத்தூரில் வசிக்கின்றனர்.  நண்பர்களைப் பார்க்க,  ஈச்சங்குப்பம் கிராமத்துக்கு வந்து தங்கியிருந்த தினேஷ்குமார்,  கடந்த புதன்கிழமை (பிப்.13)  அங்குள்ள கிணற்றில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்ய தாமதமானதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தனலட்சுமி தனது உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரை திங்கள்
கிழமை சந்தித்து மனு அளித்து கூறியதாவது: 
ஈச்சங்குப்பத்துக்கு வந்திருந்த தினேஷ்குமார் மண்டகப்பட்டு நாகப்பன் விவசாய கிணற்றில் புதன்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து,  கஞ்சனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.  தினேஷ் சாவுக்கு,  விக்கிரவாண்டி வட்டம்,  ஈச்சங்குப்பத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜேந்திரன்,  குப்புசாமி மகன் அரிகிருஷ்ணன்,  முத்துசாமி மகன் சரவணன் உள்ளிட்டோர் காரணம்.  இவர்கள்,  எனது மகனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.  
எங்களது குடும்ப நண்பர்களாக இருந்த ராஜேந்திரன் தரப்பினர் அவரது நிலத்தை எனது மகனுக்கு குத்தகைவிட்டு ரூ.5 லட்சம் கடன் பெற்றிருந்தனர்.  அந்தப் பணத்தை திருப்பி கேட்டதால்,  அவர்கள் கூட்டு சேர்ந்து,  தினேஷை கொலை செய்து  கிணற்றில் போட்டுள்ளனர். உடலில் பலத்த காயத்துடன் போலீஸார் மீட்டு,  எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.  நாங்கள் அளித்த புகார் மீது,  கஞ்சனூர் போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதால்,  நாங்கள் உடலை அடக்கம் செய்தோம்.  இந்த நிலையில்,  புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால்,  ராஜேந்திரன் தரப்பினர் தடயங்களை மறைக்க முயற்சித்துள்ளனர்.  
அவர்களது செல்லிடப்பேசிகளை ஆய்வு செய்தால், உண்மை நிலை வெளியே வரும்.  இது தொடர்பாக,  கஞ்சனூர் காவல் நிலையத்தை அணுகியபோது,  உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது என,  மரியாதை இன்றி பேசி அனுப்புகின்றனர்.  இந்த சம்பவம் குறித்து,  கொலை வழக்கு பதிவு செய்து,  தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT