முகப்பு
விழுப்புரம்

கணினி மேம்பாடு பணி: 3 நாள்களுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாது

மின்சார வாரியத்தில் கணினிகளின் சர்வர் தரம் உயர்த்தப்படுவதால், கள்ளக்குறிச்சி மின் பகிர்மான

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:42 am IST
பகிர்:

மின்சார வாரியத்தில் கணினிகளின் சர்வர் தரம் உயர்த்தப்படுவதால், கள்ளக்குறிச்சி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய உள்கோட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து  4-ஆம் தேதி வரை 3 நாள்கள் மின் கட்டணம் வசூலிக்கும் பணிகள் நிறுத்தப்படும் என மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எம்.அருட்பெரும்ஜோதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: 
மின்சார வாரிய கணினி மையத்தில் மத்திய சர்வர் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற உள்ளது. 
இதையொட்டி, கள்ளக்குறிச்சி மின் பகிர்மானத்துக்கு உள்பட்ட கோட்டப் பகுதிகளில் மார்ச் 1-ஆம் தேதி மாலை 4 மணி முதல் மார்ச் 4-ஆம் தேதி காலை 8 மணி வரை மின் கட்டண அலுவலகங்கள், கணினி வசூல் மையங்களில் மின் கட்டணத்தைச் செலுத்த இயலாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.