முகப்பு
விழுப்புரம்

லாரி மோதியதில் பள்ளி மாணவர் சாவு

திருவெண்ணெய்நல்லூரியில் லாரி மோதிய விபத்தில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:43 am IST
பகிர்:

திருவெண்ணெய்நல்லூரியில் லாரி மோதிய விபத்தில் 4-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் ஞானவேல் (8). இவர், அதே ஊரில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் முடி வெட்டிக் கொள்வதற்காக தனது தாத்தவுடன் திருவெண்ணெய்நல்லூர் பகுதிக்கு சனிக்கிழமை சென்றார். 
அப்போது, இரு மோட்டார் பைக்குகள்  மோதிக் கொண்டதால், அங்கு கூட்டம் கூடியதாகத் தெரிகிறது. இதைப் பார்ப்பதற்காக தாத்தாவுடன் சென்ற ஞானவேல், கூட்டத்திலிருந்து வெளியே வந்த போது, சாலையில் தவறி  விழுந்தாராம்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஞானவேல் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஞானவேலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.