முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் தமிழ்ச் சங்க ஆண்டு விழா

விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு விழா விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 பிப்ரவரி 2019, 9:42 am IST
பகிர்:

விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் 16-ஆம் ஆண்டு விழா விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்ச் சங்கத் தலைவர் பாலதண்டாயுதம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சொக்கநாதன், அரி.பன்னீர்செல்வம், மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளித் தாளாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நெறியாளர் சஞ்சீவிராயன் வரவேற்றார். கல்வியாளர்  ஏ.சாமிக்கண்ணு தொடக்கவுரையாற்றினார். 
சங்கச் செயலர் அனந்தகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, செஞ்சி திருக்குறள் பேரவைத் தலைவர் கோபிநாத், தொழிலதிபர் பராங்குசம், பாலகணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து, தமிழ்ச் சங்க துணைப் பொதுச் செயலர் தமிழ்நம்பி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. செஞ்சி திருக்குறள் பேரவை செயலர் தமிழரசன், பாவலர் மலரடியான், கவிஞர் விக்கிரமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலவர் கலியபெருமாள், புலவர்கள் பூங்கொடி பராங்குசம், கதிர்வேல் ஆகியோர், "தமிழர்களும், தமிழும் - நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் கவிபாடினர்.
 விழாவில், புதுச்சேரியைச் சேர்ந்த பாவலர் அப்துல் மஜித், குறிஞ்சிப்பாடி பாலவர் குறிஞ்சிவேலன் ஆகியோருக்கு வாழ்நாள் தமிழ்ப் பணி பட்டயத்தை ஏ.சாமிக்கண்ணு வழங்கினார். பேராசிரியர் பழமலய், புலவர் தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசியமாமணி சஞ்சீவிராயன் விருதாளர் அறிமுக உரையாற்றினார். தமிழ்மாமணி வேலமுருகன், வைத்தியாநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
 தொடர்ந்து, திருப்பூர் தமிழ்ச் சங்கத் தலைவர் நாகேசுவரன், பேராசிரியர் ரகமதுல்லாகான் ஆகியோர் முன்னிலையில் உரையரங்கம் நடைபெற்றது. தமிழியக்கம் பொதுச் செயலர் அக்துல்காதர் சிறப்புரையாற்றினார். சங்க பொருளாளர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.