விழுப்புரம்

விழுப்புரத்திலிருந்து 11 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் தொடக்கி வைத்தார்

DIN


விழுப்புரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 11 புதிய பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் சி.வி.சண்முகம் சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பேருந்துகளை இயக்கி வருகின்றன. 
இந்த வகையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் புதிய பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கினார்.
இதில், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 162 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 29 பேருந்துகள் தற்போது வந்துள்ளன. இதையடுத்து, முதல்கட்டமாக 11 புதிய பேருந்துகள் சனிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டன. 
சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளின் இயக்கத்தை தொடக்கி வைத்தார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக சென்னை-சேலம் வழித் தடத்தில் 2 பேருந்துகளும், சேலம்-சென்னை வழித் தடத்தில் 6 பேருந்துகளும், கள்ளக்குறிச்சி-சென்னை வழித் தடத்தில் ஒரு பேருந்தும், திருவண்ணாமலை-சென்னை வழித் தடத்தில் ஒரு பேருந்தும், புதுவை-சென்னை வழித் தட்டத்தில் ஒரு பேருந்தும் என மொத்தம் 11 புதிய பேருந்துகள் இயக்கி வைக்கப்பட்டன. 
சென்னையிலிருந்து 4 பேருந்துகள் இயக்கி வைத்துள்ளனர். மீதம் உள்ள பேருந்துகள் வந்ததும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார், வெ.ஏழுமலை எம்.பி., இரா.குமரகுரு எம்எல்ஏ, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கணேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஜி.பாஸ்கரன், தொழில்சங்க நிர்வாகிகள் அண்ணாதுரை, முத்துராமன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT