விழுப்புரம்

கரும்புத் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

DIN


விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கரும்பு வெட்டும் தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 
விக்கிரவாண்டி வட்டம், கயத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி ஏ.பூபாலன். இவர் கடந்த 2-ஆம் தேதி ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி கரும்புத் தோட்டத்தில் கரும்பை வெட்டிய பிறகு, டிராக்டரில் ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, கரும்பு வெட்டும் தொழிலாளிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், முண்டியம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையினரால் நெல்லிக்குப்பம் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனியிடமிருந்து ரூ.3 லட்சம், இறந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையாக தற்போது பெற்றுத் தரப்பட்டது.
இதற்கான காசோலையை விபத்தில் மரணமடைந்தவரின் வாரிசுதாரரான, அவரது துணைவியார் ஜெயந்தியிடம் வழங்கப்பட்டது. ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் உப தலைவர் ஆ.ரமேஷ், துணைப் பொதுமேலாளர் (கரும்பு) ஏ.திருஞானம், முதுநிலை மேலாளர் 
சு.சிவாஜிகணேசன், உதவி மேலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT