விழுப்புரம்

ஒருங்கிணைந்த மேலாண்மைப் பணி: கருவூலத்தில் மாநில கணக்காயர் ஆய்வு

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் இந்திய தணிக்கை - கணக்குப் பணி மாநிலக் கணக்காய அதிகாரி டி.ஜெயசங்கர், ஒருங்கிணைந்த நிதி - மனிதவள மேலாண்மைத் திட்டச் செயல்பாடுகள் குறித்து திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது,  கருவூலத்தில் இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்பாடுகள் குறித்த பணிகளை அவர் 
பார்வையிட்டார். 
ஒருங்கிணைந்த நிதி - மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், பயன்கள், குறைகள் குறித்தும் கருவூல கணக்குத் துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
ஊழியர்களின் திறன், திட்டச் செயல்பாட்டின் மீது அரசு அலுவலர்களுக்கு உள்ள நம்பிக்கை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். திட்டத்தைக் குறைபாடின்றி செயல்படுத்தவும் வாழ்த்து தெரிவித்தார்.
ஆய்வின் போது,  மாவட்ட கருவூல அலுவலர் பு.ரவிசங்கர்,  கூடுதல் கருவூல அலுவலர்,  உதவி கருவூல அலுவலர்கள்,  மாநில கண்காயர் தணிக்கை குழு அலுவலர்கள் மற்றும் மாவட்ட கருவூல அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT