விழுப்புரம்

தொழிலாளி கொலை வழக்கில் இருவர் கைது

DIN

திருக்கோவிலூர் அருகே தச்சுத் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே பொற்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சரவணன்(32), தச்சுத் தொழிலாளி. இவர், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்பிரபு (32) என்பவருடன் பகண்டை கூட்டுச் சாலைக்கு சென்றார்.
 அங்கு இருவரும் மது அருந்தி விட்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். பகண்டை கூட்டுச் சாலையை அடுத்த ஏந்தல் கிராமத்தில் உள்ள காடு வழியாக மண்பாதையில் சென்றபோது, அங்கு அடையாளம் தெரிய இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, சரவணன், ஜெகன் பிரபுவிடம் வழிப்பறி செய்ய முயன்றனர்.
 அப்போது, ஜெகன் பிரபு தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்தார். சரவணன் கொடுக்கவில்லையாம்.
 இதனால், ஆத்திரமடைந்த அந்த இருவரும் கத்தியால் சரவணனை வயிறு, மார்பில் குத்தினர். அச்சமடைந்த ஜெகன்பிரபு அங்கிருந்து தப்பியோடி பகண்டை கூட்டுச் சாலை போலீஸில் தகவல் கொடுத்தார்.
 உடனே, போலீஸார் அங்கு விரைந்து வந்து, காயமடைந்து கிடந்த சரவணனை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
 போலீஸார் நடத்திய விசாரணையில், சரவணனை கொலை செய்தது திருக்கோவிலூர் அருகே அரியலூரைச் சேர்ந்த கதிர்வேல் மகன் விஜயக்குமார் (27), பகண்டை கூட்டுச் சாலை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (47) என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT