விழுப்புரம்

சார்-பதிவாளர் மீது வழக்குப் பதிவு

DIN

சங்கராபுரம் சார்-பதிவாளர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
 சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த புகார்களின் பேரில் அந்த அலுவலகத்தில் விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவைக் கடந்து நீடித்தது. இந்த சோதனையில், அந்த அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ.96 ஆயிரத்து 200-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, அங்கிருந்த சார்-பதிவாளர் ஜோதி உள்ளிட்டோரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
 விசாரணையில், சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு, பத்திரப் பதிவு செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சமாக பணம் வாங்கியது தெரிய வந்ததாம். இது குறித்து, மாவட்ட ஆய்வுக் குழு உதவி அலுவலர் அமுதா, விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் சங்கராபுரம் சார்- பதிவாளர் ஜோதி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT