விழுப்புரம்

ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் தர்னா

DIN

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள்  ஞாயிற்றுக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். 
சங்கராபுரம் வட்டம், கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அணைக்கரைகோட்டாலம் கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  
இங்குள்ள அகரகோட்டலாம் பகுதியில் 14 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வருகின்றனராம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனராம். 
மேலும், சார்-ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் அளித்திருந்தனராம். ஆனால், ஆக்கிரமிப்பை அகற்றவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த அவர்கல் ஞாயிற்றுக்கிழமை ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே  அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். 
அப்போது, அவர்கள் கிராமத்துக்கு தனி பஞ்சாயத்து அமைத்துத் தரவேண்டும், தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என முழக்கங்களை எழுப்பி, வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.தகவல் அறிந்த சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் சம்பவ இடத்துக்குச் சென்று, தேர்தல் முடிந்தவுடன் ஆக்கிரமிப்பை அகற்றுவதாகக் கூறினார்.  இதை ஏற்காத கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு மாலை 6 மணியளவில் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT