விழுப்புரம்

அரிமா சங்கம் சார்பில் முப்பெரும் விழா

DIN

திண்டிவனம் அரிமா சங்கம் சார்பில், திண்டிவனத்தில் அண்மையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
 சங்கத்தின் மாவட்ட ஆளுநர் வருகை, சாதனையாளர்களுக்கு விருது வழங்குதல், அரிமா சங்கத்தின் 100-ஆவது சேவை விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
 விழாவுக்கு அரிமா சங்கத் தலைவர் அன்னை சந்தானம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஓவியர் தேவ் வரவேற்றார். செயலர் சக்திவேல் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்டத் தலைவர் சங்கரன், கல்கண்டு சுந்தரம், வேல்முருகன், கார்த்திக், கணேஷ், காந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 காவல், தீயணைப்பு, மருத்துவம், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கும், கண், உடல் தானம் செய்ய பதிவு செய்தவர்களுக்கும் சான்றிதழ்களை மாவட்ட ஆளுநர் சரவணன் வழங்கினார்.
 பின்னர், அரிமா சங்கம் சார்பில் , திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் ரமேஷ், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், சங்கப் பொருளாளர் சித்தார்த்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT