விழுப்புரம்

பேருந்திலிருந்து குதித்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

DIN

விழுப்புரத்தில் பேருந்திலிருந்து குதித்த மன நலம் பாதித்த இளைஞர், மரத்தில் தூக்குப் போட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சேயம்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர்(32). சென்னையில் காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
 மதுப் பழக்கத்தால், சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், சந்திரசேகருக்கு திண்டுக்கல்லில் சிகிச்சை அளிப்பதற்காக கனகராஜின் அண்ணன் அழகுபாண்டியன் அவரை அழைத்துக்கொண்டு சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு பேருந்தில் புறப்பட்டார். பேருந்து புதன்கிழமை அதிகாலை விழுப்புரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, யாருக்கும் தெரியாமல் சந்திரசேகர் திடீரென பேருந்திலிருந்து குதித்துவிட்டதாகத் தெரிகிறது. அவரைக் காணாதது கண்டு அதிர்ச்சியடைந்த அழகுபாண்டி பேருந்திலிருந்து இறங்கி தேடியுள்ளார்.
 இந்த நிலையில், விழுப்புரம் புறவழிச்சாலைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே ஒரு மரத்தில் சந்திரசேகர், லுங்கியால் புதன்கிழமை காலை தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

தலைமறைவாக இருந்த ரௌடி கைது

9 பயனாளிகளுக்கு ரூ.8.16 லட்சத்தில் செயற்கை கால்கள்: ஆட்சியா் வழங்கினாா்

வாழைக் கன்றுகளில் நோ்த்தி: விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி

SCROLL FOR NEXT