விழுப்புரம்

செஞ்சி அருகே இரு பிரிவினர் மோதல்: 12 பேர் கைது

தினமணி

செஞ்சி அருகே இரு பிரிவினரிடையே செவ்வாய்க்கிழமை இரவு மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 261 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அவர்களில் 12 பேரை கைது செய்தனர்.
 செஞ்சியில் உள்ள கமலக்கன்னியம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி, செஞ்சி எம்.ஜி.ஆர். நகர் மந்தைவெளி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இசைக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புகழும் வகையிலான பாடலை ஒலிபரப்புமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து மேடையை நோக்கி கல்வீசினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்போது, பாதுகாப்புப்பணியில் இருந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அமைதிப்படுத்திக்கொண்டிருந்தனர்.
 ஆனால், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தவர்களின் வீடுகள் உள்ள நரசிங்கராயன்பேட்டை அண்ணா நகர் பகுதிக்குள் புகுந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக்குகள், மாட்டுவண்டி, அரசியல் கட்சிக் கொடிகம்பம், விளம்பரப் பதாகைகளை சேதப்படுத்தினர்.
 இதையடுத்து அண்ணா நகர் பகுதியினர் 200-க்கும் மேற்பட்டோர் இசைக் கச்சேரி நடந்த இடத்துக்கு செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர். இதற்கிடையே சிலர் செஞ்சி- விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த எஸ்.பி.யின் அதிரடிப்படை போலீஸார், அங்கிருந்தவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த எஸ்.பி. ஜெயக்குமார், மேலும் பிரச்னை ஏற்படாமல் ஏடிஎஸ்பி முகிலன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
 இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து இரு தரப்பைச் சேர்ந்த 261 பேர் மீது வழக்குப் பதிந்து, ஒரு தரப்பைச் சேர்ந்த பிரபு, மணி, ஏழுமலை, விஜயகுமார், சூர்யா, பாஸ்கரன் ஆகியோரையும் கைது செய்தனர்.
 மற்றொரு தரப்பைச் சேர்ந்த அருண்குமார், முனியப்பன், சுரேஷ், சுப்பிரமணி மகன் சுரேஷ், சிலம்பரசன், புகழேந்தி ஆகிய 12 பேரையும் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT