விழுப்புரம்

கஞ்சா விற்றவர் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

DIN

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற நபரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் கே.கே. சாலைப் பகுதியில் விழுப்புரம் நகர உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் போலீஸார் சனிக்கிழமை காலை ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள ஆட்டோ நிறுத்த சந்திப்பில் ஒருவர் கைப்பையுடன் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்ததைப் பார்த்து விசாரித்தனர்.
இதில், அந்த நபர் பையில் 1.5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும்,  அவர் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சங்கர் (25) என்பதும்,  கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. இதையடுத்து, விழுப்புரம் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சங்கரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT