விழுப்புரம்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா நிறைவு

திருக்கோவிலூர்,  கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசிப் பெருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. 

DIN

திருக்கோவிலூர்,  கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசிப் பெருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது. 
இந்தக் கோயிலில், வைகாசிப் பெருவிழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்களுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 
விழாவின் 10-ஆம் நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன, பஞ்சவர்ண பூஜைகள் செய்து, வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. 
வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு காலை 9 மணிக்கு சம்ஹாரமூர்த்தி மஹா பைரவருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆலய வலமாக கோபுர தரிசனத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், உற்சவ மூர்த்திகளுக்கு சோடசோபஸார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 
தொடர்ந்து, திருவண்ணாமலை பேராசிரியர் பாக்கியலட்சுமி தலைமையில், சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. 
இதில் உதவிப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன், கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணகுமார், பாலாஜி, ஆனந்த.பாஸ்கர் ஆகியோர் பேசினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT