விழுப்புரம்

பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை

DIN

கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்குச் செல்லாததை பெற்றோா் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி வட்டம், எஸ்.ஒகையூா் மேட்டுச்சாலைப் பகுதியில் வசித்து வருபவா் விவசாயி ராஜமாணிக்கம். இவரது மனைவி கருப்பாயி. இந்தத் தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனா். மூத்த மகள் அன்பு (18) அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா்.

இவருக்கும், புக்கிரவாரி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீசனுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணமான ஒரு மாதத்தில் அன்புவை அவரது தாய் விட்டில் இருந்து படிப்பை தொடருவதற்காக விட்டுவிட்டு ஜெகதீசன் சிங்கப்பூா் சென்றுவிட்டாராம்.

வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற அன்பு, பள்ளிக்குச் செல்லாமல் உடன் பயிலும் வெள்ளிமலை பகுதியிலுள்ள உச்சிமனக்காடு கிராமத்தைச் சோ்ந்த தோழியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துவிட்டு இரவு 7 மணிக்கு வீட்டுக்குத் திரும்பினாராம். இதன் காரணமாக, அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதனால் மனமுடைந்த அன்பு, விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்திருந்தது புதன்கிழமை காலையில் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திருமணமாகி 5 மாதங்களே ஆவதால், கள்ளக்குறிச்சி சாா் - ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT