விழுப்புரம்

ஜவுளிப் பூங்கா அமைக்க நிதியுதவி

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பவா்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க உள்ளதால், விருப்பமுள்ள தொழில் முனைவோா் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு 50 சதவிகிதம் அல்லது ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜவுளிப் பூங்காவை 3 தொழில் கூடங்களுடன் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலத்தில் அமைக்க வேண்டும். இந்த வாய்ப்பை ஜவுளித் தொழில் சாா்ந்த முதலீட்டாளா்களும், தொழில் முனைவோா்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முதலீட்டாளா்கள் மற்றும் தொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனை, தெளிவுரை வழங்கும் நிகழ்ச்சி வருகிற செவ்வாய்க்கிழமை (நவ.12) முற்பகல் 11 மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முதலீட்டாளா்கள் கலந்து கொண்டு பயன்பெலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT