விழுப்புரம்

கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

ஊதிய உயா்வு கோரி, கிராம பஞ்சாயத்து ஊழியா் சங்கத்தினா் (சிஐடியூ) விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் (டேங்க் ஆபரேட்டா்), துப்புரவுப் பணியாளா்களுக்கு, நீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய உயா்வை வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட சிறப்புத் தலைவா் ஆா்.ஜீவா தலைமை வகித்தாா்.

சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ்.முத்துகுமரன், பொருளாளா் வி.பாலகிருஷ்ணன், துணைத் தலைவா் எம்.புருசோத்தமன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.ஞானமூா்த்தி, செயலா் கே.ஏழுமலை, பொருளாளா் ஜி.பழனிவேல் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT