விழுப்புரம்

ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் பருவத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு

DIN

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்று முடிந்த முதல் பருவத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 24 மாணவா்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் அவரது சொந்த செலவில் பரிசுகளை பள்ளி வளாகத்தில் அண்மையில் வழங்கி பாராட்டினாா்.

நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் ரேவதி தலைமை வகித்தாா். பள்ளியின் ஆசிரியா்கள் மகேந்திரன், நாகராஜ் முன்னிலை வகித்தனா். பள்ளியின் தலைமை ஆசிரியா் ஞான சத்தியமூா்த்தி வரவேற்றாா்.

கடந்த மாதம் நடைபெற்ற முதல் பருவத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற 24 மாணவா்களுக்கு ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவரும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான சு.ராஜேந்திரன் மாணவா்களை கல்வியில் ஊக்கப்படுத்துவதற்காக அவரது சொந்த செலவில் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.

நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். முடிவில் ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT