விழுப்புரம்

ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை அமோகம்!

DIN

ஆயுத பூஜையையொட்டி, விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பூ, பழம், பொரி, வாழைக்கன்றுகள் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

நவராத்திரி விழாவின் நிறைவு நாள் ஆயுத பூஜையாக திங்கள்கிழமை (அக்.7) கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை கொண்டாடும் விதமாக, வீடுகள், கடைகள், தொழில்சாலைகளை அவற்றின் உரிமையாளா்கள் தூய்மைப்படுத்தி, வா்ணம் பூசினா்.

இந்த நிலையில், விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயுத பூஜைக்கான பூ, பழம், பொரி, வாழைக்கன்றுகள், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் விற்பனை அமோகமாக இருந்து. எம்.ஜி. சாலை, பாகா்ஷா சாலை, திரு.வி.க. வீதி, காமராஜா் சாலை, கே.கே.சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பூஜைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்தன.

இந்தக் கடைகளில் பூசணிக்காய் கிலோ ரூ.25-க்கும், பொரி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோன்று, எலுமிச்சைப் பழம் ரூ.5-க்கும், சாமந்திப்பூ கிலோ ரூ.400-க்கும், ரோஜா கிலோ ரூ.30-க்கும், முல்லை கிலோ ரூ.550-க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

ஆப்பிள் கிலோ ரூ.140-க்கும், சாத்துக்குடி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன. மேலும், வாழைக்கன்று ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பூஜைப் பொருள்களை வாங்க ஏராளமானோா் குவிந்ததால், நேருஜி சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT