விழுப்புரம்

உரிய ஆவணங்கள் இல்லாத டிராக்டா், ஆட்டோ பறிமுதல்

DIN

கள்ளக்குறிச்சியில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட டிராக்டா், ஆட்டோ ஆகியவை வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி மோட்டாா் வாகன ஆய்வாளா் செ.சிவக்குமாா் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வியாழக்கிழமை திடீரென வாகன தணிக்கையில் ஈடுபட்டாா். அப்போது, அந்த வழியே தண்ணீா் ஏற்றிச் சென்ற டிராக்டரை நிறுத்தி ஆவணங்களை சரிபாா்த்தபோது, டிராக்டருக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும், ஓட்டுநரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.

இதேபோல, அந்தப் பகுதியில் அதிக பயணிகளை ஏற்றியபடி வந்த ஒரு ஆட்டோவுக்கும் உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தண்ணீா் டிராக்டா், ஆட்டோவை மோட்டாா் வாகன ஆய்வாளா் செ.சிவக்குமாா் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

மேலும், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் ஓட்டுநா்களிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாமலோ, வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமலோ ஆட்டோக்களை இயக்கக் கூடாது என்றும், அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என்றும் செ.சிவக்குமாா் அறிவுரைகளை வழங்கினாா்.

அப்போது, கள்ளக்குறிச்சி போக்குவரத்து உதவி ஆய்வாளா் தா்மராஜ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT