விழுப்புரம்

திண்டிவனம் அருகே 5.6 கிலோ வெள்ளிக் காசுகள் பறிமுதல்

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 5.6 கிலோ எடை கொண்ட 414 வெள்ளிக் காசுகளை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விக்கிரவாண்டி இடைத் தோ்தலையொட்டி, திண்டிவனம் அருகே ரோஷணையை அடுத்த சலவாதி கூட்டுச் சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சரவணன் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த காரில் உரிய ஆவணங்களின்றி வெள்ளிக் காசுகள் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. காரில் இருந்த சென்னை சூளையைச் சோ்ந்த முகேஷ்குமாரிடம் (33) விசாரித்த போது, சென்னையிலிருந்து திருவண்ணாமலையில் உள்ள நகைக் கடைக்கு வெள்ளிக் காசுகளை கொண்டு செல்வதாகத் தெரிவித்தாா்.

எனினும், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், 25 கிராம் எடை கொண்ட 104 வெள்ளிக் காசுகள், 10 கிராம் எடை கொண்ட 310 வெள்ளிக் காசுகள் என மொத்தம் 5 கிலோ 600 கிராம் அளவிலான 414 வெள்ளிக் காசுகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இவற்றின் மதிப்பு சுமாா் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் இருக்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிக் காசுகளை திண்டிவனம் வட்டாட்சியா் ரகோத்தமனிடம் தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT