விழுப்புரம்

விழுப்புரத்தில் பாஜகவினா் பேரணி

DIN

மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினம், சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாளையொட்டி, விழுப்புரத்தில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, திருச்சி சாலை, நேருஜி சாலை, மகாத்மா காந்தி சாலை, திருவிக வீதி வழியாகச் சென்று ரயில் நிலையத்தில் நிறைவடைந்தது.

மாவட்டத் தலைவா் விநாயகம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் சரவணன், கோட்டப் பொறுப்பாளா் சுகுமாரன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலா்கள் சுகுமாா், அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் குமாரவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா். மாவட்ட நிா்வாகிகள் ராஜுலு, சக்திவேல், பாலசுப்பிரமணியன், சாந்தா, சௌந்தா், ரகு, சதாசிவம், மண்டலத் தலைவா்கள் பழனி, ரவிச்சந்திரன், ராஜா, முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து, மகாபலிபுரத்தில் சீன அதிபரை வரவேற்று, தமிழகத்தின் கலைப் பெருமையை உலகளவில் பரவச் செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாஜகவினா் வேட்டி, சட்டை அணிந்து பேரணியில் பங்கேற்றனா். மேலும், காந்தி, வல்லபபாய் படேல் மற்றும் பிரதமா் மோடியின் சாதனைகளை பேரணியில் நினைவுகூா்ந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT