விழுப்புரம்

டி.எஸ்.பி.க்கு பாராட்டு விழா

DIN

விழுப்புரம் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய திருமாலுக்கு  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தினர் .
திண்டிவனம் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த திருமால், கடந்த மக்களவைத் தேர்தலையொட்டி, விழுப்புரம் துணை உள் கோட்ட டி.எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, விழுப்புரம் பகுதியில் மணல் கடத்தல், லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தினார்.
இந்த நிலையில், அண்மையில் அவர் சென்னை காவல் அலுவலகத்தின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மாலை விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. திருமாலுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், காவல் ஆய்வாளர்கள் (விழுப்புரம் தாலுகா) கனகேசன், (விழுப்புரம் நகரம்) ராபீன்சன், (விழுப்புரம் மேற்கு) ரேவதி, (கண்டமங்கலம்) ஜெயசங்கர், (வளவனூர்) நந்தகோபல் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT