விழுப்புரம்

திண்டிவனம் பகுதியில் திருடப்பட்ட 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: இருவர் கைது

DIN

திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்ததாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்திலான 12 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோயின. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி மேற்பார்வையில், திண்டிவனம் காவல் நிலைய ஆய்வாளர் சீனிபாபு, உதவி ஆய்வாளர்கள் நடராஜன், தமிழ்மணி மற்றும் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ரகுராமன், சுகுமார், தனிப்பிரிவு காவலர் ஆதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டிவனம் நேரு வீதியில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே திண்டிவனம் காமராஜர் நகரைச் சேர்ந்த சதீஷ்குமாரின் இரு சக்கர வாகனம் திருடுபோனது. இது தொடர்பாக, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, அதில் சந்தேகத்துக்குரிய 2 பேரின் உருவங்கள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து, சந்தேக நபர்களான திண்டிவனம் டி.வி. நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் கனகராஜ் (36), எண்டியூரைச் சேர்ந்த கணேசன் மகன் சதீஷ் (30) ஆகியோரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். இதில், அவர்கள் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருட்டு வழக்கில் எதிரிகளை கைது செய்து, சுமார் ரூ.6 லட்சத்திலான 12 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாரை திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

SCROLL FOR NEXT