விழுப்புரம்

கிராமச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN


விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வெங்கந்தூர் காலனி சேறும் சகதியுமாக மாறியச் சாலையை சீரமைக்க வேண்டுமென,  அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
வெங்கந்தூர் காலனியைச் சேர்ந்த பெண்கள் 50 பேர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திங்கள்கிழமை மனு அளித்துக் கூறியதாவது:  வெங்கந்தூர் காலனியில் உள்ள மாதா கோயில் சாலை முதல் பிள்ளையார் கோயில் வரையான சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. அவை பராமரிப்பின்றி குண்டும், குழியுமாகி மண் சாலையாகிப்போனதால்,  மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக உள்ளது. இது தொடர்பாக, காணை வட்டார வளர்ச்சி அலுவலகம்,  ஊராட்சி செயலரிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT