விழுப்புரம்

பெண் சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது

DIN


வானூர் அருகே பெண் சாராய வியாபாரி தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். 
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகேயுள்ள ஆதனப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஸ்வநாதன் மனைவி லலிதா (37).  சாராய வியாபாரியான இவர் மீது, காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடரும் இவரது குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில்,  இவரை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரைத்தார். இதனை ஏற்று அவரை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து, கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸார்,  லலிதாவை சனிக்கிழமை கைது செய்துகடலூர் மகளிர் சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT