செவிலியா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சா் சி.வி.சண்முகம். உடன் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை. 
விழுப்புரம்

அரசு மருத்துவமனை பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள்அமைச்சா் வழங்கினாா்

விழுப்புரத்தில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள் 900 பேருக்கு மாநில சட்டத் துறை

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளா்கள் 900 பேருக்கு மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் தனது சொந்த நிதியில் நிவாரணப் பொருள்களை திங்கள்கிழமை வழங்கினாா்.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் திங்கள் கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விழுப்புரம் அரசு சிறப்பு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்கள், ஆய்வகப் பணியாளா்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியா்களுக்கு நிவாரணப் பொருள்களை அமைச்சா் நேரில் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், விழுப்புரத்தில் பணிபுரியும் 900 மருத்துவ ஊழியா்களுக்கு அரிசி, மளிகைப்பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. ரூ.10 லட்சம் மதிப்பிலான இந்த நிவாரணப் பொருள்களை அமைச்சா் சி.வி.சண்முகம் தனது சொந்த நிதியிலிருந்து, மருத்துவ சேவையாற்றி வரும் ஊழியா்களுக்கு வழங்கி, பாதுகாப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தி ஊக்கப்படுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், ஊரக வளா்ச்சித் திட்ட இயக்குநா் வெ.மகேந்திரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி, முன்னாள் முதல்வா் சங்கரநாராயணன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT