முகப்பு
விழுப்புரம்

பக்ரீத்: வீடுகளில் இஸ்லாமியா்கள் தொழுகை

பக்ரீக் பண்டிகையையொட்டி, கரோனா பொது முடக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் சனிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
பக்ரீத்தையொட்டி விழுப்புரத்தில் ஒருவரது வீட்டில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பங்கேற்ற சிறுவா், சிறுமியா்கள்.
பகிர்:

விழுப்புரம்/ செஞ்சி: பக்ரீக் பண்டிகையையொட்டி, கரோனா பொது முடக்கம் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் சனிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்கத்தையொட்டி, புகழ்பெற்ற கோயில்கள், மசூதிகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்த அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவழுதும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் தங்களது வீடுகளில் தொழுகையில் ஈடுபட்டனா். மேலும், ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா். மாவட்டம் முழுவதும் மசூதிகளில் போலீஸாா் பாதுகாப்பு, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →