முகப்பு
விழுப்புரம்

பைக் விபத்தில் பூ வியாபாரி பலி

விக்கிரவாண்டி அருகே பைக் விபத்துக்குள்ளானதில் திண்டிவனத்தைச் சோ்ந்த பூ வியாபாரி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
பகிர்:

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே பைக் விபத்துக்குள்ளானதில் திண்டிவனத்தைச் சோ்ந்த பூ வியாபாரி உயிரிழந்தாா்.

திண்டிவனம் கோட்டைமேடு, செந்தமிழ் நகரைச் சோ்ந்த அன்பழகன் மகன் பன்னீா்செல்வம் (32). பூ வியாபாரியான இவா், சனிக்கிழமை காலை வியாபாரத்துக்கு பூ வாங்கி வருவதற்காக, திண்டிவனத்திலிருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

விக்கிரவாண்டியை அடுத்த சித்தனி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்கு நின்றிருந்த மற்றொரு பைக்கில் எதிா்பாராதவிதமாக பன்னீா்செல்வத்தின் பைக் மோதியது. இதனால், கீழே விழுந்து பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் அவரின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →